fbpx
Homeபிற செய்திகள்ரத்தினம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மகிழ்வித்து மகிழ மாணவர்களுக்கு அறிவுரை

ரத்தினம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மகிழ்வித்து மகிழ மாணவர்களுக்கு அறிவுரை

அடுத்தவர்களை ஊக்கப்படுத்தி னால்தான், தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள முடியும். ‘மகிழ்வித்து மகிழ்தல்’ என்ற வாசகத்தை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இரத்தினம் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது.

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2016-2017ம் கல்வியாண்டில் படித்த 793 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டன.

கல்லூரி வளாகத்தில் நடந்த 17-வது பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலம்-20, இளங்கலை மேலாண்மை-37, ஆடைவடிமைப்புத்துறை-32, இயற்பியல்-13, கணிதம்-32, உளவியல்-13, இளங்கலை காட்சித்தொடர்பியல்-33, வணிகவியல்-74 வணிக தொழில் முறை கணக்கியல்-54 (Bcom(PA) இளங்கலை வணிக கணினி பயன்பாடு (B.Com(CA)-112, B.Com (BPS)-38, கணினித்துறை-85, கணினி பயன்பாட்டியல்-38, கணினி தொழில்நுட்பம்-44, கணினி தகவல் தொழில்நுட்பம்-40, முதுகலை கணிதம்-25, முதுகலை மேலாண்மை- 39 முது கலை கணினித்துறை-15 முதுகலை தகவல் தொழில்நுட்பம்-8 முதுகலை வியிவிசி-12., முதுகலை வணிகவியல்-31 ஆகிய துறைகளில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் 793 பேருக்கு பட்டமளித்து கௌரவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர், கண்ட்ரி எச்ஆர் எக்ஸ்பெர்ட், இந்தியா, மியான்மர், பால் கார்ப்பரேசன், எஸ்.இரத்தினவேல் ராஜன் பட்டங் கள் வழங்கி பேசியதாவது:
கொரோனா கால கட்டத்தில் சவால்கள், மாணவர்களைத் தயார்படுத்தியது.

எவ்வாறு சவால்களை எதிர்கொண்டு முன்னேற வேண்டும் என்று இக்காலக்கட்டம் கற்றுக் கொடுத்தது. ஒவ்வொரு சவால்களால் தான் மாணவர்களாகிய தாங்கள் செதுக்கி கொள்ள முடியும். புடிப் பின் நிலை கல்லூரி நாட்களில் கற்ற அனுபவங்கள் என்றும் வாழ்வில் பொக்கிஷம்.

இன்றைய சூழலில் உண்மையான உலகத்தை அறிந்து கொண்டுள்ளீர்கள். கல்லூரியில் கல்வி மட்டுமல்ல, திறமைகளை உருவாக்க கல்லூரி நல்ல தளமாக இருந்தது.

தன்னுடைய பலவீனத்தை அறிந்து கொண்டு, அதனைச் தாண் டிச் செல்ல தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகளை எற்றுக்கொண்டால் வெற்றி இலக்கை அடைய முடியும். தினம் தினம். அவரவர் வாழ்வில் ஊக்கத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தவர்களை ஊக்கப்படுத் தினால்தான் தங்களை ஊக்கப்ப டுத்திக் கொள்ள முடியும். ‘மகிழ்வித்து மகிழ்தல்’ என்ற வாசகத்தை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல உணர்ந்து கொள்ள வேண்டும். பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும். ஆதலால் பல வெற்றி நிலைகளைப் பெறலாம் என்றார்.

விப்ரோ இன்ப்ராஸ்டிரக்சர் இன்ஜினீயரிங், கம்ப்ளையன்ஸ், டிஜிடைசேஷன் தலைவர் எஸ். இராணி சத்திஸ்ரீ பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
மாணவர்களின் கல்வி கற்றலை முன்நிறுத்தி, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மாணவர்களிடம் கேட்டுக் கொண்ட கனவு காணுங்கள் என்பதை மறக்கக்கூடாது.

இந்தியாவின் பெருமைகள் அதிக அளவில் உள்ளன. இந்திய நாடு வளமிக்கது. மாணவர்கள் தங்கள் வருங்காலத்தில் இந்திய வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும். புரிதல் இருந்தால் தான் வருங்காலத்தை எதிர்கொள்ள முடியும்.

வாழ்க்கைக்கு தெளிவு இருக்க வேண்டுமானால் ஓழுக்கம் அவசியம்தேவை. அதனால் தாங்கள் போகும் எல்லையை அடையமுடியும் என்றார். இரத்தினம் கல்விக் குழு மத்தலைவர் முனைவர் மதன் ஆசெந்தில் விழாவுக்குத் தலைமை தாங்கி பேசினார்.

செயலாளர் ஷீமா செந்தில் கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.மாணிக்கம் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். முரளிதரன் அறிவியல் துறை புல முதன்மையர் முனைவர் சுரேஷ், ஆராய்ச்சித்துறை புல முதன்மையர் சபரிஷ் இரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை தேர்வுக்கட்டுப் பாட்டு அதிகாரி முனைவர் எஸ். தினகரன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img