fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ல் தமிழ்நாடு நாள்...

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ல் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ல் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கையை கவனமாக பரிசீலித்து ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் என முடிவு செய் யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.

2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1ம் நாள் எல்லை போராட் டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று

தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பல்வேறு அமைப்பு களின் கோரிக் கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1ம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது.

தற்போது எல் லைக்காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக ரூ.5500ம் மருத்துவப்படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.3000 ம் மருத்துவப்படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது.

எல்லை சிறைசென்று தியாகம்செய்து போராட் டங்களில் நேரடியாக ஈடுபட்டு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ம் நாள் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img