கோவை ரயில் நிலையத்தில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சி இன்று (அக்.19) நடை பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் ராயல் கேர் மருத்துவமனையும் தெற்கு ரயில்வேயும் இணைந்து நடத்திய மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி, கோவை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, டாக்டர் சுதாகர், லாரன்ஸ், ராயல் கேர் மருத்துவமனை முதன்மை மேலாளர் (மார்க்கெட்டிங்) வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு கையெழுத் திட்டனர்.



