மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள், கோவை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாதஸ்வர மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் இன்று(அக்.4) வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண் டுகளாக கோவில் திரு விழாக்கள் எதுவும் நடப்பதில்லை. திரும ணங்களும் எளி மையாக நடத்தப்படுகின்றன.
இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகி றோம்.
எனவே அரசு நலத் திட்டங்கள் மூலம் எங்களை காப்பாற்ற வேண் டும். அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் மாதம் தோறும் உதவித் தொகை அளிக்க வேண்டும்.
நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கருவிகளை விலையில்லாமல் அரசு வழங்க வேண்டும். 58 வயது நிறைந்த மூத்த கலைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இருந்தனர்.



