fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களுக்கான டிஜிட்டல் இணையதளம் “கேம்பஸ் பவர்” ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்

மாணவர்களுக்கான டிஜிட்டல் இணையதளம் “கேம்பஸ் பவர்” ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்

ஐசிஐசிஐ வங்கி, இந்தி யாவிலும் வெளிநாட்டிலும் உயர்கல்வி படிக்க ஆர்வ முள்ள மாணவர்களுக்காக அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது.

கேம்பஸ் பவர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளமானது மாணவர்கள், பெற்றோர் மற்றும் நிறுவனங்களின் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் விதமாக அதை உருவாக்கியுள்ளது.

முதன்முறையாக வெளி நாட்டு கணக்குகள், கல்விக் கடன் மற்றும் அது குறித்த வரிச்சலுகைகள், அன்னிய செலாவணி தீர்வுகள், பணம் செலுத்துவதற்கான தீர்வுகள், கிரெடிட் டெபிட் கார்டுகள், பிற கடன்கள் மற்றும் முதலீடுகள் உள் ளிட்ட பல்வேறு வங்கி கணக்குகள் மற்றும் சே வைகள் வரையிலான அவர்களின் தேவைக்கு ஏற்றபடி, அதற்கேற்ற நிதி தயாரிப்புகளை தெரிந்து கொள்ள இந்த “கேம்பஸ் பவர்”உதவும்.

ஐசிஐசிஐ வங்கியின் அன்செக்யூர்டு அசட் பிரிவு தலைவர் சுதிப்தா ராய் கூறுகையில், “மாண வர்களின் பல்வேறு வாழ்க்கை நிலைகளில் அவர்களுக்கு ஏற்படும் தேவைகளை ஆழமாக புரிந்து கொண்டு கல்வி சூழலை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் நிறு வனங்கள் தங்களது உயர் கல்வி தொடர்பான சிக்கல்களை தீர்க்க பல்வேறு கூட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதை ஆய்வின் மூலம் கண்டறிந்தோம்.

“கேம்பஸ் பவர்” என்ற இணையதளத்தை அறி முகம் செய்வதன் வாயிலாக கல்வி தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். வெளி நாட்டில் விடுமுறை காலம் தொடங்குவதற்கு முன்பும் இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் பும் இந்த “கேம்பஸ் பவர்”இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

இந்த முன்னெடுப்பானது, மாணவர்களுக்கு அவர் களுக்குரிய டிஜிட்டல், தனிப்பட்ட மற்றும் விரிவான தீர்வுகளை பெறுவதற்கான சூழலை உருவாக்கி தருகிறது.

ஐசிஐசிஐ வங்கி வாடிக் கையாளராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சேவைகளின் பலன்கள் அனைத்து மாணவர்களுக் கும், அவர்களது பெற் றோருக்கும் கிடைக்க வேண்டும் என நம்புகி றோம்”என்றார்.

டிஜிட்டல் முயற்சிகளை நிறைவேற்றும் விதமாக, மாணவர்களுக்கான சூழ லை உருவாக்கும் வகையில் தனிப்பட்ட கிளைகளை அர்ப்பணிக்கவும் ஐசிஐசிஐ வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் கிளை கான்பூரில் உள்ள ஐஐடி மற்றும் நாடு முழுவதும் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களின் வளாகங்க ளில் அமைக்க உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img