கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி, சென்னை அண்ணா நகர் மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் ஷோரூமில், வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்புச் சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர் களால் வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள் கொண்ட கண்காட்சியை பேராசிரியர் டாக்டர் ரேகா, ஸ்டெபி, ஜோதி, டாக்டர் பீனா செரியன், அனுபமா ஹரிதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இவர்களுடன் சென்னை அண்ணா நகர் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் துணை கிளை தலைவர் சமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்ட மான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
க
ண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை, வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம். மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 270-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராம நாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் 17 கிளைகளை கொண்டுள்ளது.
இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா மற்றும் அமெரிக்க நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 9.16 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டின நகைகளையும் வெள்ளி நகை களையும் விற்பனை செய்கிறது.



