உலகின் முன்னணி நகை விற் பனைச் சங்கிலி தொடர்களில் ஒன்றான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் 2021-22ம் நிதியாண்டில் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த நிதியாண்டில் மேலும் 97 ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள் ளது. இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த வருவாய் ரூ.45,000 கோடியை எதிர்பார்த்துள்ளது.
‘ஒரே இந்தியா’, ‘ஒரு விலையில் தங்கம் திட்டம்’ மற்றும் நியாயமான விலைக் கொள்கை ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க இலக்கை அடைய நிறுவனத்திற்கு உதவியது.
சமீபத்தில் நடந்த பங்கு தாரர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது, இந்த விவரங் களை நிறுவனம் வெளியிட்டது. மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது கூறியதாவது:
எங்கள் தயாரிப்பு வடிவமைப்பு மையத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றிவைப்ப தால், இந்த அரிய சாதனையை கடினமான ஆண்டிலும் அடைய உதவியுள்ளது. எங்கள் கொள்கைகள் மூலம், உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் நம் பிக்கையை பெற முடிந்தது.
கடந்த இருபது ஆண்டுகள் நாங்கள் இருக்கும் அனைத்து சந்தைகளிலும் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். ‘மேக் இன் இந்தியா’, ‘மார்க்கெட் டு தி வேர்ல்ட்’ (Make in India, Market to the world) என்ற கொள்கையை பின்பற்றுகிறோம்.
வரி இணக்கம் மற்றும் வெளிப்ப டைத்தன்மை ஆகியவை எங்கள் வணிக மாதிரியின் தனிச் சிறப்புகளாகும்.
எங்கள் வணிகத்தின் மதிப்புச் சங்கிலி முழுவதும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறோம். நாங்கள் செயல்படும் சந்தைகள் முழுவதும் பொறுப்பான நகைக்கடை என்ற பெருமையை பெற இது உதவுகிறது என்றார்.
இந்த நிறுவனம் நடப்பு நிதியாண் டிற்கான வளர்ச்சிக்கான ஒரு லட்சிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட் டத்தின் ஒரு பகுதியாக நிறுவனம் 97 புதிய ஷோரூம்களை திறக்கும்.
இந்தியாவில் 60 ஷோரூம்கள் மற்றவை வெளிநாடுகளில் அமையும். வரும் மார்ச் 2023-ம் ஆண்டு இறு திக்குள் நிறுவனத்தின் மொத்த ஷோரூம்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்த்த திட்டம்.
இந்நிதியாண் டின் இறுதிக்குள் 13 நாடுகளில் வலுவான இருப்பை இந்நிறுவனம் கொண்டிருக்கும்.



