fbpx
Homeபிற செய்திகள்மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவி ராஜலட்சுமி

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவி ராஜலட்சுமி

தேனி
-உலக சுற்றுச்சூழல் தினம் ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972-ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2021ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருளாக “சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு” என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.


அதன் அடிப்படையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குமுளி-தேக்கடியில் உள்ள அமலாம்பிகா கான் வென்ட் ஆங்கிலப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் மாணவி ராஜலட்சுமி மரக்கன்றுகளை தமிழக-&கேரள எல்லைப் பகுதியான லோயர்கேம்ப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மாணவி ராஜலட்சுமி கூறியதாவது:

நான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இந்த சமுதாயப் பணியை செய்கிறேன். இயற்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் மலைப்பகுதிகளில் மரக் கன்றுகள் நடுவதற்கு முடிவெடுத்தேன். என்னுடைய தந்தை பாண்டித்துரை செய்தியாளராகவும், சதுரங்க பயிற்சி ஆசிரியராகவும் உள்ளார்.

இந்த உயரிய பணியை செய்வதற்கு என்னை ஊக்கு வித்ததோடு,
மரக்கன்றுகள் நட்டு தினந் தோறும் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

நான் அதிக மரக்கன்றுகளை வரும் காலங்களில் நட்டு சுற்றுச்சூழலை பாது காக்கும் முயற்சியில் ஈடுபடுவேன். இவ் வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img