தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அங்கன்வாடி ஊழி யர்கள் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ‘தேசிய ஊட்டச்சத்து மாதமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.
செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரைஅனுசரிக்கப்படும் இந்த மாதத்தில், மக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு, பேரணி,அரை மணி நேரத்தில் 60 ஊட்டச்சத்து உணவுகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப் புணர்வுகளை ஏற்படுத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று (செப்.29) கோவை சுங்கம் முதல் இராமநாதபுரம் வரை மனித சங்கிலியாக நின்று தேசியஊட்டச்சத்து குறித்து பல்வேறு வாசக ங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வை ஏற்படுத் தினர்.



