fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்களிடம் கூடுதல் கட்டண வசூல் 2 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

பொதுமக்களிடம் கூடுதல் கட்டண வசூல் 2 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

கோவை மாநகராட்சி சுகாதார வளாகத்தில் பயன்பாட்டிற்கு பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில், மாநகராட்சி ஆ¬ ணயாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேற்று (நவ.29) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 74-க்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் சுகாதாரப் பணி யாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டார்.

பொதுமக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபடுமாறு சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையினால், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை இடிபாடுகளை சரி செய்யும் பணியை பார் வையிட்டார்.

மத்திய பேருந்து நிலையங்களில் பழுதாகி உள்ள இடிபாடுள்ள சுவர் களை ஆய்வு செய்து, உடனடியாக அதை சரி செய்யுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்பகுதியில் உள்ள சுகாதார வளாகங்களில் கூடுதலாக கட்டணம் வசூலித்த இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.50-க்கு உட்பட்ட டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி குடியிருப்பின் உறுதித்தன்மையை பெறுவதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

இராஜ வீதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரு கில் உள்ள சுகாதார வார்டு அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறி யாளர்கள் குமரேசன், ஜெ யின்ராஜ், ஏஞ்ஜலினா, சுகாதார ஆய்வாளர்கள் பவுன்ராஜ், சலைய்த் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img