fbpx
Homeபிற செய்திகள்பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்- கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்- கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் சேகு ஜலாலுதீன் அம் பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளா கத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான்பீவி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் பைரோஸ்கான், அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
9-வது வார்டு உறுப்பினர் பீர்மைதீன் வரவேற்றார்.

இதில் ஊராட்சியின் 2021-22ம் ஆண்டு வரவு செலவு வாசிக்கப்பட்டு பிளக்ஸ் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நூறு நாள் வேலைத்திட்டம் தேர்வு, சுகாதாரம், ஊட்டச்சத்து, வறுமை ஒழிப்பு திட்டம், வேளாண்மை நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெரியபட்டினம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து இரண்டு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டியும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டித்தர கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இப்பகுதியில் ஏழை,எளிய மீனவர்கள் விவசாய தொழிலாளிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் நலன் கருதி வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற துணை தலைவர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img