fbpx
Homeபிற செய்திகள்பெ.நா.பாளையம் தமிழ்ச்சங்க அமர்வில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவருக்கு பரிசு

பெ.நா.பாளையம் தமிழ்ச்சங்க அமர்வில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவருக்கு பரிசு

பெரியநாயக்கன்பாளையம் தமிழ்ச் சங்கத்தின் அக்டோபர் மாத அமர்வு ஞாயிற்றுக் கிழமை நடந்தது. பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி நடந்த இந்த அமர்வில், சங்கச் செயலாளர் இரா.விவேகானந்தன் வரவேற்றார்.

சங்கத்தின் புரவலர் மு.ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். நரசிம்மநாயக்கன் பாளையம் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் முனியாண்டி திருக்குறள் முற்றோதல் செய்தார். படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் என்.தெய்வ சிகாமணி பேசினார்.

பாரதியார் குறித்து தம்பு மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர் குணசேகரன், செந்தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லி.கனகுசுப்பிரமணியம், வழக்குரைஞர்கள் சூலூர் குமரேசன், பி.கண்ணன், அழகுமாணிக்கம் ஆகியோர் பேசினர்.

இணைய வழியில் பெங்களுரு விலிருந்து கவிஞர் சுபாஷ் பார தியார் குறித்து கவிதை வாசித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ந.கணேசன் பாரதியார், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் வாழ்வியல் அனுபவங்கள் குறித்து பேசினார்.

சங்க உதவித் தலைவர் எல்.ஜி.பாலதண்டாயுதம் நன்றி கூறினார்.
விழாவில் புதுவை தமிழ் அமைப் பின் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற விவேகானந்தனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img