கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தேசிய மாணவர்படை அலுவலரான திரு.ஞா.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டருக்கு தினமலர் பத்திரிகை நிர்வாகம் “லட்சிய ஆசிரியர்” என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
ஆசிரியரின் அர்ப்பணிப்பு, சமூக சேவைகள், கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், விளையாட்டு துறையில் சாதித்த சாதனைகள், கொரோனா காலத்தில் ஆற்றிய பணிகள், ஆகியவற்றின் அடிப்படையில் இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் “லட்சிய ஆசிரியர்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் பத்திரிகை அலுவலக அரங்கில் கோவை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ந.கீதா இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்ற ஆசிரியரை பள்ளியின் தாளாளர் பால்ராஜ், தேசிய மாணவர் படையின் அதிகாரி கர்னல் சந்திரசேகர், பள்ளியின் தலைமையாசிரியை அமலோற்பவ மேரி, உதவித் தாளாளர் பிச்சை ராபர்ட், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், நண்பர்கள் வாழ்த்தினார்கள்.



