புரட்சிக் கவி சி.சுப்பிரமணிய பாரதி யாரின் நூறாம் ஆண்டு நினைவஞ்சலி தர்மபுரி நகர் மகாத்மா காந்தி மணி மண்டபத்தில் நடந்தது. பாரதி முத்தமிழ் மன்றம் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
பாரதி முத்தமிழ் மன்றத்தின் கௌரவத் தலைவர் ஆர்.கருணாநிதி, டாக்டர் வி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், செயலாளர் ராஜேந் திரன் வரவேற்றார்.பாரதியார் படத்திற்கு பாரத மாதா ஆன்மீக சேவை மையத்தலைவர் பி.என்.குருராவ் மாலை அணிவித்தார்.
கம்பன் கழகத் துணைத் தலைவர் புலவர் பரமசிவம், தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கச் செயலாளர் நடராஜன், அன்னை கஸ்தூரி பாய் சேவா சங்க இணைச் செயலாளர் சந்திரசேகர், மாநிலக்குழு நாகை பாலு, பாரதமாதா மக்கள் சிந்தனைக் குழு தலைவர் பிரதீப் குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வணங்கா முடி, சமூக சேவகர் அர்த்தனாரி, கவியரசு மன்றச் செயலாளர் பால முரளி, பாரத மக்கள் சிந்தனை பொருளாளர் சந்திரமோகன், பிஆர்ஓ வினோத் பாரதி, முத்தமிழ் மன்ற விஜயகுமார், பாலசந்தர், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, சம்பத்குமார் ஆகியோர்மலர்அஞ்சலிசெலுத்தினர்.
பாரதி முத்தமிழ் மன்றத்தின் பொருளாளர் தகடூர் வேணுகோபால் நன்றி கூறினார்.



