கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், இலவச மருத்துவ முகாம், மண்டலத் தலைவர் ஏ.டி.ராஜன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், துணைத் தலைவர் மதன்மோகன் டாக்டர்கள் வேலுமணி, ஜெயலட்சுமி, ராஜஸ்ரீ ஆகியோர் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை யொட்டி நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமை, மாவட்ட தலைவர் நந்தகுமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக பொதுமக்களுக்கு அவர் மருந்துகள் வழங்கி பேசினார். பாஜக மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாபு டாக்டர்லெனின், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த சர்க்கரை நோய் பரி« சாதனை முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், காவேரிபாபு, அன்புகுமார், கலைக்கண்ணன் ஜெகதீசன் சுடர்ரமேஷ் சிவக்கொழுந்து, எஸ்.டி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



