fbpx
Homeபிற செய்திகள்பட்டா மோசடி புகார் மனு மீது நடவடிக்கை கோரி மீண்டும் மனு

பட்டா மோசடி புகார் மனு மீது நடவடிக்கை கோரி மீண்டும் மனு

பட்டா வழங்கியதில் மோசடி நடந்தது தொடர் பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி, பாதிக்கப்பட்டமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புக £ர் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பட்டா வழங்கியதில் மோசடி நடைபெற்றதாகவும், அந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று (செப்.20) கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித் தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகரில், கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளது. சிலரின் வீட்டுமனைப் பட்டாக்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.

இது தொடர்பாக ஏற்க னவே கன்னார்பாளையம், சாஸ்திரி நகர், கைகாட்டி புதூர், கருப்பராயர்நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து 10- வது வாரமாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவில்லை.

தற்போது மீண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img