திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் வீரத்தளபதி ராயல் லட்சுமணன் தலைமையில் பசும்பொன் பக்தர்கள் பேரவை சார்பில் முக்குலத்தோரின் ஐம்பெரும் விழா நடை பெற்றது.
முக்குலத்தோர் மூத்த தலைவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி பின்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் ஒருங்கிணைந்த தேவரின கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் குட்டி(எ)செல்லத்துரை முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச்செயலா ளர் சுடலைமுத்து, மாநில பொருளாளர் ஈஸ்வர பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாநில செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுடலை, மாவட்ட நிர்வாகிகள் வடக்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், வடக்கு மாவட்ட தலைவர் காளிராஜ், மாநகரத் தலைவர் சாலை சிவக்கனி, தெற்கு மாவட்ட தலைவர் மணி கண்டன். தென்காசி மாவட்ட செயலாளர் காளிராஜ், மாவட்ட இளை ஞரணி தலைவர் ஐயப்பன், மாவட்ட அமைப்பாளர் தினேஷ், .மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாண்டியன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மகேஷ்குமார், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்தி, தெற்கு மாவட்ட செயலாளர் தினேஷ், கருவம்பாளையம் பகுதி செயலாளர் முரளி, தேனி மாவட்ட செயலாளர் மனோஜ்குமார், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் அசோக்குமார், சிவகங்கை மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், மாவட்ட இளைஞரணி துரைப்பாண்டி, பரத்குமார், ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அஜித்குமார் மற்றும் பசும்பொன் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



