முல்மினா பானத் தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரின் நுகர்வுக்கு ஏற்றது என, ஜக்டேல் இண்டஸ்ட்ரீஸ் பி.லிட்.டின் பிரிவான ஜக் டேல் ஹெல்த்கேர் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சுகாதார பானமான முல்மினா குறித்த மருத்துவ ஆய்வின் முடிவுகள் வெயிடப்பட்டன. முல்மினா இயற்கையான ஊட்டச் சத்துக்களைக் கொண்டது. பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இது நோய் எதிர்ப்பு திறன் மற்றும் ஊட்டச் சத்துக்களைக் கொண்ட குடிக்க தயாராக இருக்கும் ஒரே பானமாகும். இந்த பானத்தின் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு மற்ற சுகாதார பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமை கிறது என்பதை ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.
மஞ்சள், கோட்டுகுலா போன்ற ஆயுர்வேத மருந் துகள் மாம்பழத்துடன் இணைந்து நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இப் போது இது 7 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஒரு உறுதியான பங்கு இருப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, மல்லிகே மருத்துவமனை, குழந்தை நல மருத்துவர் ஆலோசகர் சௌமியா நாகராஜன் கூறி யதாவது:சுவாசக்குழாய் நோய்த் தொற்று உள்ள நோயாளிகளுக்கு, ஆன்டிபாயாட்டிக்ஸ் உடன் மாம்பழம், கோலா மற்றும் மஞ்சள் ஆகியவற்றை தேவையான வைட்டமின்கள், தாதுக்களுடன் இணைந்து பயன் படுத்தும் போது, நோய் எதிர்ப்பு சக்தி, ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது.
இதை குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த சோதனை மேற்கொண்ட போது கிடைத்த தகவல் ஆகும். புகழ்பெற்ற மருத்துவ நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், சுவாச நோய்த் தொற்று உள்ள குழந்தைகளுக்கு முல்மினா மாம்பழம் (மா, கோட்டு கோலா சென்டெல்லா ஆசியா டிகா மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் கலவை) கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 14 மற்றும் 28 நாட்களில் தரமான சிகிச்சை நெறிமுறையால், நோய் எதிர்ப்பு குறிப்பான்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.
ஜக்டேல் இண்டஸ்ட்ரீசின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஜக்டேல் பேசுகையில், உலக அளவில் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட்ட தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அவை மருத்துவ ரீதியாக நிரூபிக் கப்பட்டுள்ளன பகிரப்பட வேண்டும் என்றார்.



