fbpx
Homeபிற செய்திகள்நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

உதகை வட்டாரம் தோட்டக்கலைத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி மீக்கேரி கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மகேஷ் (மகேந்திரா இபிசி நிறுவனம்) நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல் மற்றும் நுண்ணீர் பாசன கருவிகளை பராமரிப்பது குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

உதவி தோட்டக்கலை அலுவலர் ஜே.ஜெகதீசன் தோட்டக்கலைத் துறையில் உள்ள அனைத்து திட் டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரா.சதீஷ் வரவேற்புரை வழங்கினார்.

உதவி தொழில் நுட்ப மேலாளர் ரா.அஸ்வினி நன்றி கூறினார். இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img