fbpx
Homeபிற செய்திகள்நியாய விலைக் கடை பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு சங்கம் கோரிக்கை

நியாய விலைக் கடை பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு சங்கம் கோரிக்கை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக இதன் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் செய் தியாளரிடம் கூறியதாவது:

நியாய விலைக்கடை பணியாளர் களுக்கு முதல் தேதியில் ஏடிஎம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும், கொரோனாவால் உயிரிழந்த பணியாளருக்கு இழப்பீடு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், கூட்டு றவுத்துறையில் நியாய விலைக் கடைகளில் 3500 விற்பனையாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நியாயவிலைக் கடைகளில் மூலம் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக பொருட் களை பொட்டலமாக வழங்க வேண்டும், நியாயவிலைக் கடை ஊழி யர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மாதம் 400 ரூபாய் வழங்கப்படவேண்டும்.

மேலும் பெண்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அனைத்து நியாய விலை கடைகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 11ம் தேதி மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

படிக்க வேண்டும்

spot_img