கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜூலை 27) புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு தொடர்பாக வணிக சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை யில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை போன்ற நிகோ டின் கொண்ட பொருள்கள் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், விநியோகம் செய்தல், தயாரித்தல் அல்லது வாகனங்களில் எடுத்துச் செல்லவும் கூடாது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகளில் அனைத்து வாகனங்களும் காவல் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை கடத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல், விநியோகம் செய்வோர் மற்றும் சேமித்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டால், அவர் களது உரிமம் ரத்து செய்யப டுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொது மக்களுக்கு கேடும் தீங்கும் விளைவிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வோர் தொடர்பாக 9444042322 (வாட்ஸ் அப்) என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
புகையிலை பான்மசாலா குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்த்துவதுடன் அனைத்து வியாபாரிகளும் விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்புகளின் சார்பில் புகையிலை, பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்பனைக்கெதிரான உறுதிமொழியினை அனைவரையும் ஏற்கச் செய்ய வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் பள்ளி வளாகங்கள் கல்லூரி வளாகங்களுக்கு அருகா¬ மயில் உள்ள கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தவும் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பறக்கும் படை அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மரு.தமிழ் செல்வன், வட்டார போக்குவரத்து அலுவலர் (மத்தியம்) பாஸ்கரன் மாநகர நகர் நல அலுவலர் மரு.ராஜன், மாவட்ட ஆலோசகர் மரு.சரண்யா மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கோவை மாவட்டத்தில் புகையிலை பான் மசாலா, குட்கா விற்பனையை கட்டுப்படுத்த வணிக சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



