சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி கால்நடைபண்ணை வளாகத்தில் ரூ.6.74 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள நாட்டினக் கோழிகள் இனப்பெருக்க வளாக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானுரெட்டியுடன் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் அதை பார்வையிட்டனர்.
உடன் ஓசூர் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



