fbpx
Homeபிற செய்திகள்‘நம்ம கோயம்புத்தூர் 2020’ அமைப்பின் ரத்தம், கண், உடல் உறுப்பு தான முகாம்

‘நம்ம கோயம்புத்தூர் 2020’ அமைப்பின் ரத்தம், கண், உடல் உறுப்பு தான முகாம்

கோவை காந்திபுரம், அடுத்த சித்தாபுதூர் பகுதியில் உள்ள, தனியார் வளாகத்தில் , நம்ம கோயம்புத்தூர் 2020, அட்மின் ரமேஷ், மற்றும் ஆஷா, மாடரேட்டர்ஸ் மருத்துவர் மோகன், ஸ்ரீராணி தலைமையில், ரத்ததான முகாம், கண்தான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் என மூன்று நிகழ்வாக நடைபெற்றது.

காலை 9 மணியளவில் துவங்கப்பட்ட இந்த ரத்த தான முகாமில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது, ரத்தத்தை தானமாக, அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கிக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவர் மோகன் கூறியதாவது: நம்ம கோயம்புத்தூர் 2020, என்ற முகநூல் அமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ரமேஷ் என்பவரின் சிறிய முயற்சியில், முகநூல் குழுவாக ஆரம்பிக்கப் பட்டு, இன்று இந்த குழுவில் 12 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர், என்றார்,

ஆரம்ப காலகட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக ஆதரவற்ற மக்களுக்கு, உணவு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று, இந்த குழு உருவாக்கப் பட்டு செயல்பட்டு வந்த நிலையில் இன்று ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் அளிக்கும் வகையில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார்,

கடந்த முறை இதே போன்று ரத்த தான முகாம் நடத்திய போது, 50 யூனிட் ரத்தம், அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது, இந்த முறை 100 யூனிட் ரத்தம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் இந்த அமைப்பின் நிர்வாகிகளான, ருத்ரம், ஆனந்த், பாண்டீஸ்வரன், ஷேக் மொய்தீன், ராஜேஸ்வரி, குப்புத்துரை, ஹஸ்னா, முருகுஷ், மற்றும் பாசமலர் உதவும் கரங்களை சார்ந்த வினோத்குமார் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img