fbpx
Homeபிற செய்திகள்நம்பியூர் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுரை

நம்பியூர் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுரை

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று (ஆக.9) மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் அரசின் சார்பில் அனைத்து துறைகளின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பதிவேடுகளை பார்வையிட்டார்.

நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.31.38 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 7 பணிகளும் ,தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 8 பணிகளும் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்ரூ.5.82 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4 பணிகளும் 15-வது நிதிக் குழு மான்யத்தின் கீழ் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 54 குடிநீர்பணி (ம) சுகாதாரப் பணி என மொத்தம் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 73 புதிய திட்டப் பணிகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான கோப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுகளின் போது நம்பியூர் வட்டாட்சியர் மாரிமுத்து நம்பியூர் செயல் அலுவலர் மற்றும் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img