“தொழில்நுட்பம் எங்களுக்கு முக்கிய அடித்தளமாக உள்ளது,” என்று ரேஷாமண்டி நிறுவன தலைமை தொழில் நுட்ப அதிகாரி சௌரப் அகர்வால் தெரி வித்தார்.
இந்தியாவின் முதல் சில்க் -டெக் ஸ்டார்ட் அப் நிறுவனம் ரேஷா மண்டி.
இந்நிறுவனம் பட்டு விவசாயிகள், வணிகங்கள் மற்றும் சில்லறை விற்பனை யாளர்களுக்கான பி2பி சந்தையாக செயல்படுகிறது.
உலகளாவிய மாற்று முதலீட்டு மேலாளரான ‘கிரியேஷன் இன்வெஸ்ட் மென்ட்ஸ்’ மற்றும் இதர முதலீட்டாளர்கள் தலைமையில், 30 மில்லியன் அமெரிக்க டாலரை சீரிஸ் கி நிதி சுற்றின் மூலம் திரட்டியுள்ளதாக அறிவித்தது.
இந்த சுற்று சமபங்கு மற்றும் சில கடன்களின் கலவையைக் கொண் டிருக்கும். ஈக்விட்டி நிதியில் 9 யூனி கார்ன்ஸ், வென்ச்சர்கேடலிஸ்ட்ஸ், நெக்ஸஸைச் சேர்ந்த சந்தீப்சிங்கால், இந்தியா மார்ட் நிறுவனர் பிரிஜேஷ் அகர்வால், ஆம்னிவேர் ஆகிய புதிய முதலீட்டாளர்களே ரேஷாமண்டியின் ஆரம்பச் சுற்றுக்கு வழிவகுத்தவர்கள்.
கடன் முதலீட்டாளர்களில் நார்தர்ன் ஆர்க், அல்டீரியா, இன்னோவன் மற்றும் ஸ்ட்ரைட் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
“தொழில்நுட்பம் எங்களுக்கு முக்கிய அடித்தளமாக உள்ளது,” என்று தெரிவித்த ரேஷாமண்டி நிறுவன தலைமை தொழில் நுட்ப அதிகாரி சௌரப் அகர்வால், மேலும் கூறும்போது, “இந்த நிதி திரட்டல் செயல்பாடுகளில் அறிவியல் ஆலோசனைகள் மற்றும் மேம்பாடுகள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கமுடியும்.
ஜனநாயக மயமாக்கப்பட்ட சந்தைக்கான அணுகலை வழங்கும் நிதி தீர்வுகளுடன் பங்களிப்பாளர்களைநாம் செயல்படுத்தவும் முடியும். உயர்தரமான தயாரிப்புகளை உருவாக்கும் திறன் மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கான களம் அமைக்கும் பார்வை ஆகியவை இந்திய பட்டுக்கு நீண்டகாலமான வரலாறு உள்ளதும் நினைவு கூரத்தக்கது.
ரேஷா மண்டியின் தனித்துவமான AI மற்றும் IoT தொழில்நுட்பம் ஆனது இந்தியாவில் உள்ள சிறந்த துணி சிக்கல்களுக்கு வெளிப்படையான மற்றும் மலிவான தீர்வுகளை கொண்டுவருகிறது.
அதோடு, பட்டுத் தொழிலை நெறிப்ப டுத்தவிவசாயிகளுடன் நெருக்கமாக வேலை செய்யும்போது, குறிப்பாக விவசாயிகளின் உற்பத்தித்திறனுக்காக நிர்வ கிக்கப்பட்ட ரேஷாமண்டி அப்ளிகேஷ னானது பயன்படுகிறது.



