fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க 70வது ஆண்டு பவள விழா- வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது

தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க 70வது ஆண்டு பவள விழா- வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது

தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70வது ஆண்டு பவள விழா வருகிற 23ஆம் தேதி டிஎஸ்எப் கிராண்ட் பிளாசாவில் வைத்து நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கப்பல் முகவர்கள் சங் கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி உலக அளவில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு தொழில் நகரமாகும்.

இந்தியப் பொருளா தாரத்தின் வளர்ச்சியும் தாராள மயமாக்கலும் உலகின் பிற நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் அதிகரிக்க வழிவகுத்தது. இந்த வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் பெரும்பங்கை தூத்துக்குடி துறைமுகம் எடுத்துக் கொள்கிறது.

ஸ்டீமர் ஏஜெண்டுகள் கஸ்டம் ஹவுஸ் ஏஜெண்டு கள், ஸ்டீவெடோர்ஸ் போன்றவற்றுக்கான பயனர் சங்கங்கள் உருவாகியது. இதன் தொடர்ச்சியாக தூத்துக் குடி கப்பல் முகவர்கள் சங்கம் 1952 இல் உருவாக்கப்பட்டது.

“தூத்துக்குடி ஸ்டீமர் ஏஜெண்ட்ஸ் அசோசி யேஷன் கீழ் பதிவு செய்யப் பட்டது. சங்கங்கள் பதிவுச் சட் டத்தின் 05.07.2002 அன்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சங்கத்தின் பெயர் தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கம் என் மாற்றப்பட்டது.

இன்றைய நிலையில் சங்கத்தில் 77 கப்பல் வர்த்தகத்தில் அக்க றையுள்ள ஒருவருடன் ஒருவர் சுமூகமான உற வைப் பேணுவதில் சங்கம் பாடுபட்டு வருகிறது.

சங்க உறுப்பினர்களின் குறைகள் எதுவாக இருந்தா லும் அரசியலமைப்பு முறைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த சேவையின் மூலம் 3000த்துக்கும் மேற்பட்ட கப்பல் மாலுமிகள் பயன் பெறுகின்றனர்.

2020-21 மற்றும் ஏப்ரல் 2022 வரை கோவிட்-19 காலப்பகுதியில் தூத்துக்குடி கப்பல் முக வர்கள் சங்கம் வழங்கிய சேவை ஒரு பாராட்டுக்குரிய சேவை யாகும். இது தவிர துறைமுகம் மற்றும் சங்கத்தின் கூட்டுக் கரங் களுடன் தூத்துக்குடி கப்பல் வர்த்தகத்தை மேம்படுத்துதல் மற் றும் எளிதாக்குதல் ஆகியவற்றில் சங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த 70ஆண்டு காலமாக தூத்துக்குடி கப்பல் முகவர் கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரு கின்ற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை தூத் துக்குடி ஹோட்டல் டிஎஸ்எப் கிராண்ட் பிளா சாவில் வைத்து 70வது ஆண்டு பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்த லைவர் ஆனந்த்மொரைஸ், செயலாளர் மோகன், துனைத்தலைவர் ஜெயந்த் தாமஸ், துணை செயலாளர் சகாயராஜ், பொருளாளர் செலஸ்டின் வில்லவராயர், மற்றும் பவள விழா கமிட்டி ஆலோசகர்கள் ஜேபி ஜோ வில்லவராயர், பிஎஸ்டிஎப் வேல்சங்கர், எட்வின் சாமுவேல், மற் றும் பவள விழா குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img