தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அருகில் கூடுதல் ஆட்சியர் சரவணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் அனிபெர்மின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செழியன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பொறுப்பு ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.



