திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வில்வராயநல்லூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில் 5வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் (கலசப்பாக்கம்) சரவணன், கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதாப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



