கோவையில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்துபவர்கள் திருமண மண்டபங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்கக்கூடாது என்று ஆட்சியர் அறிவித்துள் ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2021ம் ஆண்டு தீபா வளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில்(மாநகரை தவிர்த்து) தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பமுள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
பட்டாசு கடை அமையும் இடம் 9 சதுர மீட்டர் முதல் 25 சதுர மீட்டர் வரை இருக்க வேண்டும். இடத் தின் பிலவரைப்படம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இடத்துக்கு நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீதின் நகல், உரிய தலைப்பின் கீழ் உரிமக் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச் சீட்டு, மனு தாரரின் பான் கார்டு, ஆதார் அல்லது ரேசன் கார்டு ஆகியவற்றின் நக லை இணைக்க வேண்டும்.
தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற் காக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள நிபந்த¬ னகளின்படி, பட்டாசு கடைகளின் மேல்மாடியில் குடியிருப்பு, பட்டாசு இருப்பு வைக்க கூடாது.
மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்ட பங்கள், எளிதில் தீப்பற்றும் பொருள்கள் உள்ள பகுதிகளில், கட்டிடங்கள் இருக்கக் கூடாது.
பொதுமக்கள் கூடும் பகுதிகள், பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம் அருகில் பட்டாசு கடைகள் அமைக்கக்கூடாது.
காலியிடத்தில் பட்டாசுக் கடை அமைக்கும் போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலி யிடம் இருக்க வேண்டும். பட்டாசுக் கடை வைக்கக் கோரும் இடத்துக்கு கதவு எண்ணுடன் கூடிய விலாசம் குறிப்பிட வேண்டும்.
திருமண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கக் கூடாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு வரும் விண்ணப்பங்களும், நிபந்தனைகளை கடைபிடிக்காத விண் ணப்பங்களும் ஏற்கப் படாது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



