fbpx
Homeபிற செய்திகள்திமுகவுக்கே வாக்களிப்போம் வேட்பாளர் ஜெயப்பிரதா தேவியிடம் பொதுமக்கள் உறுதி

திமுகவுக்கே வாக்களிப்போம் வேட்பாளர் ஜெயப்பிரதா தேவியிடம் பொதுமக்கள் உறுதி

கோவை மாநகராட்சி 64-வது வார்டில் திமுகவுக்கே வாக்களிப்போம் என்று வேட்பாளர் ஜெயப்பிர தாதேவி சீனிவாசனிடம் வார்டு மக்கள் உறுதிய ளித்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் கோவை மாநகராட்சி 64-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் ஜெயப்பிரதா தேவி சீனிவாசன்.

தேர்தலில் முதல்முறை யாகக் களம் காணும் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் 64-வது வார்டு பொதுமக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஜெயப்பிரதா தேவி சீனிவாசன் புலியகுளம், ராமநாதபுரம் பகுதி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக வுக்கே எங்கள் வாக்கு என்று பொதுமக்கள் உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் ஜெயப் பிரதா தேவி, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன். 64-வது வார்டை சுத்தமான சுகா தாரமான வார்டாக மாற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img