Homeபிற செய்திகள்திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக நிவாரண உதவி

திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக நிவாரண உதவி

கோவையில் தி.மு.க.கிழக்கு மாவட்டம், 100 வது வட்டக்கழகம் சார்பாக கொரோனா பாதித்த மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கொரோனா கால ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கும் மேலும் கொ ரோனாவால் பாதித்து உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ஒன்றிணை வோம் வா.. எனும் திட்டத்தில் தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் அவரது ஆணைப்படி, கோவை தி.மு.க கிழக்கு மாவட்டம்,குறிச்சி தெற்கு பகுதி 100 வது வட்டக்கழகம் சார்பாக போத்தனூர், கணேசபுரம் முரண்டம்மன் கோவில் வளாகத்தில் கொரோனாவால் பாதித்த குடும் பத்தினர்களுக்கு உதவி தொகை மற்றும் நிவாரண பொருட்களாக இலவச அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நிவாரண உதவி பெறுவோர் அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கி சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

100 வது வட்டக்கழக பொறுப்பாளர் பொன் சுரேஷ் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இதில் தி.மு.க.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமை தாங்கி, பொது மக்களுக்கு நிதி உதவி அரிசி,மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினார். முன்னதாக கொரோனாவால் உயிரி ழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், தி.மு.க.குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், வடக்கு பகுதி பொறுப்பாளர் காதர், மற்றும்,தனலட்சுமி ரங்கநாதன் வட்டக்கழக நிர்வாகிகள் ஆதவன் ஆறுமுகம், கணேஷ்பிரபு, துர்கா, ராஜ்குமார், ஸ்டானாலி, எல்.ஐ.சி.கண்ணன், மாணிக்கம் உட்பட பகுதி, வட்டக்கழகம், கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img