சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டு பேசியதாவது:
சாலை பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளருக்கு தொழில் நுட்ப கல்வி பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்ற தர ஊதியம் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும்.
பணி நீக்க காலத்திலும், பணிக் காலத்திலும் இறந்த சாலைப்பணியாளர்கள் வாரிசுகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி வழங்கப்படாத நிலை உள்ளது.
அதனால் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கோட்ட பொறியாளர் முருகேசன் நன்றி உரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



