நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறையின் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு வாகனம் மூலம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கி யமான குழந்தைகளுக்கு முதல் ஆயிரம் நாட்கள் மேற்கொள் ளப்பட வேண்டிய ஊட்டச்சத்து உணவு முறைகள், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் ஊட்டும் முறைகள், பிறந்த குழந்தைக்கு சீம்பால் வழங்குவதன் நன்மைகள், தாய்ப்பால் ஊட்டுவ தால் தாய்மார்களுக்கு
ஏற்படும் நன்மைகள், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறை கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இவ்வாகனம் மூலம், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை, நாமக்கல் பேருந்து நிலையம், புதன்சந்தை, இராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங் களை, பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்டத்துறை அலுவ லர்கள், வட்டார திட்ட உதவி யாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



