fbpx
Homeபிற செய்திகள்தற்கொலைக்கு முயன்ற தங்கையைக் காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த அண்ணனும் பலி: சோமனூர் அருகே பரிதாபம்

தற்கொலைக்கு முயன்ற தங்கையைக் காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த அண்ணனும் பலி: சோமனூர் அருகே பரிதாபம்

சோமனூர் அருகே தற்கொ லைக்கு முயன்ற தங்கையை காப் பாற்ற கிணற்றுக்குள் குதித்த அண் ணனும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் தேவராயம் பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (64). இவரது மகன் சுந்தரம் (42). திருமணமாகவில்லை. தந்தையுடன் வசித்து வரும் அவர் அருகிலுள்ள விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வருகிறார். ராமனின் மகள் சகுந்தலா (39) சாமளாபுரத்தில் தனதுகணவர் சின்னதுரை (41), மகள்கள் அனுஜா (21), சாலினி (15) ஆகியோருடன் வசித்து வந்தார். சின்னதுரை சாமளாபுரத்தில் விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.

சகுந்தலா உடல் சரியில்லாத தால் கடந்த சில தினங்களாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் தேவராயம் பாளைத்தில் உள்ள தந்தை ராமன் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டு தந்தை வீட்டுக்கு திரும்பினார். அவர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் தந்தை யின் வீட்டின் எதிரே உள்ள 150 அடி ஆழமுடைய பாழடைந்த கிணற்றில் குதித்தார்.

இதை பார்த்த அவரது அண்ணன் சுந்தரம் தங்கையை காப்பாற்ற தானும் கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்த பல்லடம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்து சகுந்தலாவின் சடலத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப் பினர்.
சுந்தரத்தின் உடல் கிடைக்காத நிலையில் 2வது நாளாக நேற்று காலை முதல் மீண்டும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். ஆனால் மாலை வரை சுந்தரத்தின் சடலம் கிடைக்கவில்லை.

மங்கலம் இன்ஸ்பெக்டர் பாலசுந் தரம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி, பல்லடம் தீயணைப்புத்துறை உதவி ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாழடைந்த கிணறு என்பதால் கிணற்றுக்குள் கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற விஷ பாம்புகள் வசித்ததால் மீட்பு பணி மிகவும் தாமதமாகியது.

இது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தங்கையை காப்பாற்ற முயன்று அண்ணனும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img