தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை அமலாக்கத்துறை மூலம் விசாரணை என்ற பெயரில் மிரட்டும் மத்திய அரசை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், மாவட்ட பொறுப்ப £ளருமான பி.தீர்த்தராமன் தலைமை தாங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நிர்வாகிகள் வடிவேல், வேடியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகி டி. நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட தியாகிகள் சங்க தலைவர் வீரமுனிராஜ் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர் களை அமலாக்கத்துறை மூலம் மிரட்டும் மத்திய அரசை கண்டித்து கட்சி நிர்வாகிகள் பேசினர்.
இந்த போராட்டத்தில் வட்டார தலைவர்கள் ஞானசேகர், காமராஜ், ஜனகராஜ், மணி, வேலவன், வெங்கடாசலம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் காளியம்மாள், தொழிற்சங்க நிர்வாகி சென்னகேசவன், மாவட்ட நிர்வாகிகள் கனகராஜ் ,சண்முகம், கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான காங் கிரஸ் கட்சி நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண் டனர்.முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி உண்ணா விரதத்தை முடித்து வைத்தார். முடிவில் நிர் வாகி ஜெய்சங்கர் நன்றி கூறினார்.



