தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வைத்தியநாதன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



