தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தர்மபுரி நகர கிளை பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடஷ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பணிமனையில் பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்து வசதிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்த அவர், கழிவறை, சமையலறை, பணியாளர் ஓய்வு அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது போக்குவரத்துக்கழக பொது மேலாளர், துணை மேலாளர், கிளை மேலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
கழிவறைகளை தூய்மையாக வைத்தல், பணியாளர்களின் ஓய்வு அறையை மேம்படுத்துதல், நவீன கழிவறை, நவீன சமையல் கூடம், பழுதான பேருந்துகளை முறையாக பராமரித்தல், பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி நேரங்களில் பேருந்துகளை இயக்க செய் தல், நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பேருந்துகளையும் தொடர்ந்து இயக்குதல், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் – பெ.பெரியசாமி, ப.சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பால கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சக்திவேல், போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொதுச் செயலாளர் ராஜா, நகர செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், ஊடகப் பேரவை பூபால், நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் – ஆறுமுகம், குப்பன், சுந்தர மூர்த்தி, சுந்தரேசன், வடிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



