சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு தருமபுரி செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதியமான்கோட்டை பி2 காவல் நிலையத்தில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சேலம் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (புதன்கிழமை) மாலை தருமபுரி சென்றார்.
வழியில் அதியமான்கோட்டை பி2 காவல் நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விசாரித்தார்.
முன்பு ஒருமுறை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதல்வர் ஸ்டா லின் திடீர் ஆய்வு நடத்தியது குறிப் பிடத்தக்கது.



