fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப கழகத்திற்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப கழகத்திற்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 23.2.2022 அன்று தனது வலைதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியல் வெளியிட்டது. அதில் மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் விசீகிஷி அங்கீகாரம் பெற்ற விளையாட்டு சங்கங்களுக்கு மாநில அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்தது.

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் 2019ல் அங்கீகரிக்கப்பட்ட சங்க பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப் பட்டது. இதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக அரசின் அங் கீகாரம் அற்ற விளையாட்டு எனும் நிலைக்கு சிலம்பம் தள்ளப்பட்டது.

தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப கழகம் மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதன் தலைவர் மயிலை.தா.வேலு, பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ் ஆகியோரின் ஆவணங் கள் மற்றும் செயல்பாடுகள் நிறைவாக இருந் ததால் 20.4.2022 அன்று தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப கழகத்திற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.

இதற்கு நன்றி தெரிவித்து கோவை மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் பொது குழு கூட்டம் கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. சங்க தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் சுதாகர் வரவேற்புரை வழங்கினார்.

மாநில கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டம் விக்னேஷ்வர் ராவ், விருதுநகர் மாவட்டம் பாண்டியன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

சிலம்ப விளையாட்டுக்கு சீருடை பணியாளர் மற்றும் விளையாட்டு ஒதுக்கீட்டில் 3% வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களுக்கும் தமிழ் நாடு அமெச்சூர் சிலம்ப கழகத்தின் தலைவர் மயிலை தா.வேலு அவர் களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த 40 ஆண்டு காலமாக சிலம்ப விளையாட்டுக்காக அரசின் நிதி உதவி பெற்று அதை சரி வர கையாளாமல் பல்வேறு ஊழல் செய்த தமிழ்நாடு சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிலம்ப வீரர்கள் நலனை கருத்தில் கொண்டு புற்றீசல் போல செயல் பட்டு வரும் அங்கீகாரம் பெறாத சங்கங்களின் நடவடிக்கைகளை கட் டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் பொருளாளர் பாண்டிவேல் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img