பள்ளி வளாகத்தில் உணவு உண்ணும்போது தனித் தனியாக அமர்ந்து உண்ண வேண்டும் என்று உதகை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா மாணவர்களை அறிவுறுத்தினார்.
முதல்வரின் உத்தர வின்படி பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, உதகை நகராட்சி மேல்நிலை ப்பள்ளி மற்றும் பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று (செப்.1) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கொரோனா தொற்று நோய் பரவலை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் இதுநாள் வரையில் மூடப் பட்டிருந்தன.
முதல்வர் உத்தரவுப்படி இன்றைய தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளாகிய நீங்கள் உணவு உண்ணும் பொழுது கூட்டம் சேராமல் தனித் தனியாக அமர்ந்து உணவு உண்ண வேண்டும்.
சளி, காய்ச்சல், தலைவலி போன்று ஏதேனும் அறிகுறி தென்பட்டால் பள்ளிக்கு தெரிவித்து, பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கட்டாயமாக இறுக்கமான முறையில் மூக்கு மற்றும் வாய் முழுவதும் மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும். வகுப்பறையில் உள்ள போது முகக் கவசத்தை கழற்றக் கூடாது.
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் சரியான முறையில் முகக்கவசம் அணிந் துள்ளார்களா என்பதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் உள் ளவர்கள் மற்றும் வீட்டின் அருகில் உள்ள வர்கள் எவரேனும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
சமூக இடைவெளியை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் இடங்களான வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார். ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், உதகை வட்டாட்சியர் தினேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



