fbpx
Homeபிற செய்திகள்டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் புதிய மாடல் கார்களின் விலை அறிவிப்பு

டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் புதிய மாடல் கார்களின் விலை அறிவிப்பு

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அதன் அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் அடுத்த 7 மாடல்களுக்கான விலையை அறிவித்துள்ளது.
இந்த கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலை:

ஜி ஏடி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 15,54,000, எஸ் ஏடி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 13,48,000 மற்றும் வி எம்டி ஏடபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 17,19,000, வி எம்டி 2 டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 15,89,000, ஜி எம்டி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 14,34,000, எஸ் எம்டி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 12,28,000, இ எம்டி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 10,48,000 ஆகவும் விலையை நிர்ணயித்து, இந்தியா முழுவதற்கும் இது பொருந்தும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

M இடிரைவ் 2 டபிள்யூடி ஹைப்ரிட் – ரூ. 18,99,000, T இடிரைவ் 2 டபிள்யூடி ஹைப்ரிட் – ரூ. 17,49,000, எஸ் இடிரைவ் 2 டபிள்யூடி ஹைப்ரிட் – ரூ. 15,11,000, M ஏடி 2 டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 17,09,000 என்றும் 4 மாடல் கார்களுக்கான விலையை ஏற்கனவே இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது 7 மாடல் கார்களின் விலைகளும் வெளியாகி உள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசனைப் பிரிவு இணை துணைத் தலைவர் அதுல் சூட் பேசியதாவது:
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 4 மாடல் கார்களுக்கான விலை நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் தற்போது வெளியிடப்பட்டுள்ள 7 மாடல் கார்களின் விலைகளும் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

இந்நிறுவனத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எஸ்யூவி கார் கடந்த ஜூலை மாதம் முன்பதிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செல்ப் சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைபிரிட் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன், நியோ டிரைவ் ஆகிய 2 வகைகளில் கிடைக்கிறது.

முன்பதிவுகளை www.toyotabharat.com/online- http://www.toyotabharat.com/online- booking/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு சென்று பார்வையிடலாம். விவரங்களுக்கு www.toyotabharat.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

படிக்க வேண்டும்

spot_img