கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் என பேசினார்.
சிஐஐ தொழில் கூட்டமைப்பு மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கருத்தரங்கில், அரசின் மின் ஆளுமை நிறுவனம் – சென்னை கணினித்துறை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர்.
டேட்டா சென்டர்கள் அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது; கிராமப்புறங்கள் வளர்ச்சியடைய
அதிவேக இணைய சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத்துக்கென தனித்துறையை உருவாக்கியது திமுக ஆட்சிதான். தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
“எது இல்லாமலும் வாழ்ந்துவிடலாம், இணையம் இல்லாமல் வாழ முடியாது என்ற சூழல் உள்ளது;
அனைத்து துறைகளும் தகவல் தொழில்நுட்பத் துறையை சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.



