டெய்ரி டே ஐஸ்கிரீம்ஸ் – ரெட் வெல்வெட் ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ கேக் மற்றும் ஃபட்ஜ் ஐஸ்கிரீம் ப்ரீமியம் டப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ரெட் வெல்வெட் ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ கேக் மற்றும் ஃபட்ஜ் ஐஸ்கிரீம் டப் ஒவ்வொன்றின் விலையும் ரூ.299/- என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவை 480 மி.லி. டப்களில் கிடைக்கும். ஒவ்வொரு டப் ஐஸ்கிரீமையும் 5 நபர்கள் வரை பருகலாம்.
டெய்ரி டே நிறுவனத்தின் இயக்குனர் எம்.என். ஜெகன்நாத் கூறியதாவது: நேர்த்தியாக உருவாக்கப் பட்டிருக்கின்ற இந்த ப்ரீமியம் ஐஸ்கிரீம்களை வாடிக்கையாளர்களுக்காக வழங்குவதில் பெரு மகிழ்ச் சியடைகிறோம். ரெட் வெல்வெட், சாக்கோ கேக் மற்றும் ஃபட்ஜ் ஐஸ்கிரீம்கள் ஆகிய இரண்டுமே தனித்துவமான சுவை கொண்டவை.
எமது உற்பத்தி தொழிலகத்தில் மேற்கொள் ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இவை உருவாக் கப்பட்டிருக்கின்றன. டெய்ரி டே பிராண்ட், அதன் தனித்துவமான சுவைகளுக்காக நுகர்வோரின் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது.
புத்தாக்கமான புதிய தயாரிப்புகளை நுகர்வோருக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்குவது எங்களது தொடர் முயற்சியாக இருந்து வருகிறது.
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் அனைத்து முக்கிய விற்பனையகங்களிலும் டெய்ரி டே-யின் ரெட் வெல்வெட் ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ கேக் மற்றும் ஃபட்ஜ் ஐஸ்கிரீம் டப்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்றார்.
டெய்ரி டே -யின் ரெட் வெல்வெட் ஐஸ்கிரீமில் சீஸ் மற்றும் எக்லெஸ் ரெட் வெல்வெட் கேக்களை உட்கொண்டிருக்கிறது.
ரெட் வெல்வெட் சுவையுள்ள க்ரீம் அடிப்பகுதியை ரெட் வெல்வெட் கேக் மற்றும் செர்ரி பழத்தின் சிறு துண்டுகளைக் கொண்ட கலவையாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
480 மி.லி. கொள்ளளவு கொண்ட ரெட் வெல்வெட் ஐஸ்கிரீம் டப் நுகர்வோர்களுக்கு தெவிட்டாத சுவையளிக்கும் விருந்தாக இருக்கும்.டெய்ரி டே – யின் சாக்கோ கேக் ஃபட்ஜ் – ல் இடம் பெறுகின்ற அற்புத சுவையுள்ள எக்லெஸ் சாக்லேட் கேக், இந்த ஐஸ்கிரீமை சுவையின் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.



