நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 30 இன்டெக்ஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்திய பரஸ்பர நிதித் துறையில் முதலாவதான பாஸிவ் ப்ராடக் DSP நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 50 ETF-ஐ DSP நிஃப்டி 50 ETF-உடன் அறிமுகப்படுத்துவதாக DSP இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் அறிவித்துள்ளது.
இந்த புதிய தரத்தை மையமாகக் கொண்ட மிட்கேப் ETF முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் குறைந்த அபாயம் மற்றும் ஒப்பீட்டளவில் நிலையான வருவாய் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளுடன் தரமான மிட் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான ஒரு விருப்பத்தேர்வை வழங்குகிறது.
இரண்டாவது புதிய தயாரிப்பான DSP நிஃப்டி 30 ETF நிஃப்டி 50 இன்டெக்ஸ்-இல் இருக்கும் அனைத்து 30 நிறுவனங்களிலும் குறியீட்டுக்கு ஏற்ப முதலீடு செய்யும்.
DSP நிஃப்டி மிட்கேப் 150 குவா லிட்டி 50 ETF ஆனது, நிதி மேலாளருக்குரிய எவ்வித ‘யோசனை’ மற்றும் உணர்ச்சிகளன்றி, நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 50 இன்டெக்ஸ்-ஐ விதிகளின் அடிப்படையிலான உத்தியை உள்ளபடியே எவ்வித பாரபட்சமின்றிப் பின்பற்றுகிறது.
இந்தக் குறியீடு முந்தைய 5 நிதி ஆண்டு காலத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஈக்விட்டி மீதான வருமானம், ஃபினான்ஸியல் லிவரேஜ் (நிதிச் சேவை நிறுவனங்களைத் தவிர) மற்றும் ஒவ்வொரு ஸ்டாக்கிலும் ஒரு பங்குக்கான வருமானத்தின் (EPS) வளர்ச்சி மாறுபாடு போன்ற அளவீடுகளைப் பயன்படுத்தி, தர மதிப்பெண்கள்’ அடிப்படையில், இதன் தாயான நிஃப்டி மிட்கேப் 150 இன்டெக்ஸ்-லிருந்து 50 நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கிறது.
ஆகவே, இந்த ETF, முதலீட்டாளர்களுக்கு நாளைய முன்னோடிகளாவதற்கு வாய்ப்புள்ளவற்றை சொந்தமாக்குவதற்கு ஒரு எளிய வழியை அளிக்கிறது.
அது அவர்களுக்கு அதிக அபாயம், அதிக வருமானம் எனும் உத்தியைப் பயன்படுத்தி, ‘பெரிய வருமானம் பெற வாய்ப்பளிக்கிறது.
இது ஒரு பாஸிவ் நிதியாக இருப்பதால், இது அதிகளவில் ஆக்டீவாக நிர்வகிக்கப்படும் மிட்கேப் நிதிகளைவிட குறைவான செலவினங்களைக் கொண்டிருக்கும்.



