fbpx
Homeபிற செய்திகள்ஜேடி எஜூகேஷன் அண்ட் டிரெய்னிங் உடன் கே.பி.ஆர். கலைகல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜேடி எஜூகேஷன் அண்ட் டிரெய்னிங் உடன் கே.பி.ஆர். கலைகல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஜேடி எஜுகேஷன் அண்ட் டிரெய்னிங் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பாலுசாமி பிரதிநிதிகளை வரவேற்று பேசினார்.

அப்போது, கார்ப்பரேட் தொழில் துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் முக்கியத்துவம்குறித்து விளக்கினார். மாணவர்கள் தங்கள் தொழில் இலக்கை அடைவதற்காக, தங்கள் திறன்களை மேம்படுத்த இந்த வகையான புரிந்துணர்வுகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கோவை ஜேடி எஜுகேஷன் அண்ட் டிரெய்னிங் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சம்ஜித் தனராஜன் பேசும்போது, பல்வேறு படிப்புகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தவும், அந்தந்த துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் இதயத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கூடுதல் அறிவுத்திறன் வழங்க இந்த வகையான முயற்சிகளை மேற்கொண்ட கே.பி.ஆர். நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.

முனைவர் ப.ஸ.சியாம் சுந்தர், முதன்மையர் -மேலாண்மையியல் துறை நன்றி கூறினார். கல்வி மற்றும் ஆசிரிய விவகாரங்களுக்கான முதன்மையர் பி.சர வணபாண்டி, முனைவர் கே.குமுதா தேவி, முதன்மையர்- வணிகவியல் துறை, முனைவர் ப.ஸ. சியாம் சுந்தர், முதன்மையர்-மேலாண்மையியல் துறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கார்ப்பரேட் விவகாரங்கள் நிர்வாகி க.ராகவி இந்த திட்டத்தை ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img