காந்தி பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில், 100 பேர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சேலம் மண்டல தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் வே.ஜோதி தெரிவித்துள்ளதாவது:
மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, சேலம் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ,காந்தி யடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அக்.2-ம் தேதி பள்ளி மாணவர்க ளுக் கான பேச்சுப் போட்டி, சேலம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்தது. மாணவர்கள் 69 பேர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், சிந்தாமணியூர் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.காமராஜ் பேச்சுப் போட்டியைத் தொடங்கி வைத்து பேசினார்.
பேச்சுப் போட்டிக்கான தலைப் புகள், போட்டிக்கு சிலநிமிடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், சேலம் மாவட்டம் குளூணி மேல்நிலைப் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி சா.விகாசினி முதல்பரிசும், சேலம் (வலசையூர்) அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி வ.நிக்கிதா இரண்டாம் பரிசும், சேலம் மாவட்டம் (மாசிலா பாளையம்) ஜி.வி. மேனி லைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் சா.சு.பூ. ராம் குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
சேலம் மாவட்டம் (சவுரியூர்) அரசு மேனிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர் மா.தனுஷ், சேலம் (மேச்சேரி) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர் கா.ஸ்ரீஹரி பிரதாப் ஆகிய இருவரும் சிறப்புப்பரிசுபெற்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை தமிழ்ச் செம்மல் விருது பெற்ற முனைவர் கு.கணேசன் தொடங்கி வைத்து பேசினார்.
பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவர்கள் 31 பேர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலை இரண்டாமாண்டு (ஆங்கிலம்) மாணவர் ச.அஜித்குமார் முதல் பரிசும், சேலம் மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு அறி வியல் (இயற்பியல்) மாணவர் ச.கோகுல் இரண்டாம் பரிசும், சேலம் மாவட்டம் அரசு சட்டக்கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர் ப.கோபா லகிருஷ்ணன் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
சேலம் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறையினரும் அவர்களுடன் இணைந்து தமிழாசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் இப்போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்குவார்.
இவ்வாறு வே.ஜோதி தெரிவித் துள்ளார்.



