fbpx
Homeபிற செய்திகள்சிறந்த காவல் நிலையம்: தொண்டாமுத்தூர் ஆய்வாளரிடம் விருதை வழங்கினார் எஸ்.பி.

சிறந்த காவல் நிலையம்: தொண்டாமுத்தூர் ஆய்வாளரிடம் விருதை வழங்கினார் எஸ்.பி.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் பெற்றது. இந்த விருது இன்று ஆய்வாளரிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் காவல் நிலையத்தை சிறப்பாக பராமரித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் 2019-ம் ஆண்டிற்கான மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருதானது தொண்டாமுத் தூர் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருதினை இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அப்போதைய தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய நவநிதகிருஷ்ணனிடம் வழங்கினார்.

மேலும், இவ்விரு தினை பெற்றதற்காக ஆய்வாளருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img