fbpx
Homeபிற செய்திகள்சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை

சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்கள் சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேராசி ரியர்களிடம் நிறைய வினாக்களைக் கேட் பதால் அத்திறனை வளப்படுத்த முடியும் என்று கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 14-வது பட்ட மளிப்பு விழாவில் அகில இந்திய பல்க லைக்கழக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் பங்கஜ் மித்தல் பேசினார்.

கோவை, கொங்குநாடு கலை அறி வியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று (ஜூலை 15) வளாகத்தில் நடந்தது.

அகில இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் பங்கஜ் மித்தல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
மதிப்புமிக்க கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ள நீங்கள் அனைவரும் இங்கு கற்ற கல்வி அறிவுடனும், பண்பாடு, மானிட மதிப்புகள் ஆகியவற்றுடனும் திகழ்ந்து சாதனையாளர்களாக விளங்க வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை எதைப் படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்கிற தெளிவை மாணவர்களுக்கு வழங்குகிறது.

அத்துடன் வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான வாய்ப்பை புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேராசிரியர்களிடம் நிறைய வினாக்களைக் கேட்பதால் அத்திறனை வளப்படுத்த முடியும்.

பாரத நாட்டைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. கற்பித்தலில் காலத் திற்கேற்ப புதிய நுட்பங்களை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

கல்லூரிச் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி வரவேற்றார்.
பட்டமளிப்பு விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் மா.லச்சுமணசாமி தொடங்கிவைத்தார்.

முதுநிலைத் தேர்வில் தரவரிசை பெற்ற 22 பட்டதாரிகளுக்கும், இள நிலைத் தேர்வில் தரவரிசை பெற்ற 24 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப் பட்டன. முதுநிலை, இளநிலை, டிப்ளமோ பயின்ற 975 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் த.முரளீஸ்வரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இளநிலை பட்டம் பெற்ற 935 பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img