fbpx
Homeபிற செய்திகள்சளி, காய்ச்சல், இருமல் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும் முன்களப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

சளி, காய்ச்சல், இருமல் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும் முன்களப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.25 தேவாங்க மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப் பணியாளர் களிடம் ஆணையாளர் பேசியதாவது:

முன் களப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி காய்ச்சல், இருமல் மூச்சுத்திணறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.

அதன் விபரங்களை கோவிட்-19 களஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர். அதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டறை மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து கொரோ னா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற் காக, வீடுகளில் கொசு உற்பத்தி ஏற்படாமல் இருக்க, தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து மத்திய மண்டலம் வார்டு எண்.51 டாடாபாத் 11-வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார்.

பின்னர் வார்டு எண்.51 ராம்நகர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

பூங்கா நடைபாதைக்கு வருபவர்களை நுழைவுவாயிலில் வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை கண்டறிய வேண்டும். கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி நுழைவுவாயிலில் கிருமிநாசினி வைத்திட வேண்டும்.

பதிவேடுகளில் அவர்களது பெயர்களை குறிப்பிட வேண்டும். பூங்காவின் உட்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தினை குப்பை இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் வார்டு எண்.51-க்குட்பட்ட ராம் நகர் சொர்னாம்பிகா மனைப்பிரிவு பகுதியில் பொதுக் கழிப்பிடத்தில் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்பிரமணியம் நகரமைப்பு அலுவலர் (மத்தியம்) ரவிச்சந்திரன் உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதர அலுவலர் திருமால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img