கோவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1.5 லட்சம் தடுப்பூசிகளுடன் ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட நிர்வா கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாது காக்கும் கேடயங்களாக விளங்கும் தடுப்பூசிகளை அனைத்து தரப்பினரும், பெற்று பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிலும் குறிப்பாக தற்போது, மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய ஜவுளிக்கடைகள், பொழுது போக்கு கூடங்கள், குளி ரூட் டப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றிற்கு செல்லும் மக்கள் தடுப் பூசிகள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை பரிசோதனை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத் தப் பட்டுள்ளது.
இதன்படி, வரும் ஞாயிற் றுக்கிழமை மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்ட முழுவதும் நடை பெறவுள்ளது. இம்முகாமானது காலை 7 மணி முதல் மாலை 7மணி வரை நடை பெறும்.
கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப்பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் முகாம்கள் 1166 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 308முகாம்கள் என மொத்தம் 1474 இடங்களில் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38,67,926 ஆகும். இதில் 27,07,550 நபர்கள் 18 வயதிற்கு மேற்பட்டோர்.
இது வரையில் 22,03,034 நபர்கள் முதல் தவணை தடுப்பூசிகளும், 5,75,837 நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூ சிகளும் என 27,78,871 தடுப்பூ சிகள் கோயம் புத்தூர் மாவட்டத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் தற்போது இரண்டாம் தவணைக்காக காத்திருப்போர்களாக 1,05,463 (கோவிஷீல்டு), 44,178 (கோவாக்சின்) என 1,49,641 நபர் களும் உள்ளனர்.
மாவட்டத்தில் 1474 இடங் களில் நடைபெறும் முகாம்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் மக்கள் தடுப்பூசி பெற்று பயனடையும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2-ம் தவணை பெறத் தகுதியுள்ள நபர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.



